க - வரிசை 84 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கருநாக்கு

தீயவற்றைப் பேசும் தன்மை.

கரையேறுதல்

துன்பத்திலிருந்து மீளுதல்.

கர்ணகடூரம்

காதுக்கு இனிமையற்ற பேச்சு.

கர்லாக்கட்டை

உடற் பயிற்சி செய்யப்பயன்படும் ஒருவகைக் கட்டை
திரட்சியான உடற் கூறுடையவன்

கலகலப்பு

மகிழ்ச்சிப் பொருக்கம்.

கலாய்பூசு

பாத்திரங்களுக்கு ஈயம் பூசு.

கல்கண்டு

கற்கண்டு.

கல்தா

வெளியேற்றம்.

கல்மிஷம்

தந்திரச் செயல் : சூதுவாது.

கல்லா

பணம் பெற்றுக் கொள்ளும் இடம்.

கல்லாப் பெட்டி

பணம் வைக்கும் பெட்டி.

கல்லுளி மங்கன்

மன அழுத்தம் உள்ளம்.

கவலைக்கிடம்

அபாயமான உடல் நிலை.

கவைக்குதாவது

நடைமுறைக்குப் பயன்படாது.

கழிசடை

உதவாத தன்மை.

கழிசல்

வேண்டாததாக ஒதுக்கப்படுவது.

கழுத்தறு

துன்பத்துள்ளாக்கு.

கழுத்தறுப்பு

பெருந்துன்பம்.

கழுத்தை நீட்டு

திருமணத்திற்குச் சம்மதி.

கள்ளக்கையெழுத்து

ஏமாற்றும் நோக்கத்தில் பிறர் கையெழுத்துப் போன்று இடுதல்.