க - வரிசை 83 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கத்தல்

உரத்துக் கூறுதல்.

கதகத என்று

மிதமான வெப்பம்.

கதறக்கதற

மிகவும் துன்பப் பட : கதை அளத்தல், கதை விடுதல் : நம்ப முடியாதபடி உரைத்தல்.

கந்து வட்டி

கடனாகத் தரும் பணத்திற்கு முன்கூட்டியே வாங்கும் வட்டி.

கபளீகரம்

பொருளைத் தன் வயப்படுத்தல் : கவர்தல்.

கப்சிப்

அமைதியாக.

கப்பம் கட்டுதல்

இலஞ்சத் தொகை கொடுத்தல்.

கமகமஎன்று

நறுமணம் கமழ்தல்.

கமர்கட்டு

வெல்லப் பாகால் செய்யப்பட்ட திண்பண்டம்.

கம்ப சூத்திரம்

கடினமான செயல்.

கம்பி எண்ணு

சிறைத் தண்டனை பெறுதல்.

கம்பி நீட்டு

அகப்படாது தப்பி ஓடுவது.

கயிறு திரி

பொய்க் கதையைக்கூறு.

கரடியாய்க் கத்து

திரும்பத் திரும்பக் கூறு.

கரடிவிடுதல்

தான் சொல்வதைப் பிறர் நம்புவாரென்று நினைத்துப் பொய் கூறுதல்.

கரடுமுரடு

மேடு பள்ளம் நிறைந்த இடம்.

கரம் பற்றுதல்

திருமணம் கொள்ளுதல்.

கரம்பு பேசுதல்

பயனற்ற செயலைக் கூறுதல் : தற்பெருமை மொழிதல்.

கரியாக்கு

வீணாக்குதல்
பொருளையழித்தல்

கருகருவென்று

செழிப்பு : வளமையைச் சாற்றுதல்.