க - வரிசை 82 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கட்டுச் சோறு

பொட்டலமாகக் கட்டப்பட்ட சோறு.

கட்டுப் பட்டி

பண்டைய பழக்க வழக்கம் உடையவர்.

கட்டு மஸ்து

உடல் வலிமை.

கண்கட்டு வித்தை

ஜால வித்தை.

கண்டபடி

பார்த்தவாறு
இஷ்டப்படி
ஒழுங்கின்றி

கண்ட மேனிக்கு

தாறுமாறாக.

கண்டும் காணாமல்

பொருட்படுத்தாமல்.

கண்ணாக இரு

கருத்துடன் செயல்படு.

கண்ணாடி அறை

எச்சரிக்கையாக நடந்து கொள்வதைக் குறிப்பது.

கண்ணும் கருத்துமாக

மிகவும் பொறுப்பாக.

கண்ணைக் கசக்குதல்

வருத்தம் மிகுதல்.

கண்ணை மூடிக்கொண்டு

சிந்தனை ஏதுமில்லாமல்.

கண்துடைப்பு

போலியாக.

கண்மண் தெரியாது

கட்டுப்பாடு இல்லாது.

கண்மூடித்தனம்

ஆராயாது செய்தல்.

கண்றாவி

வெறுக்கத்தக்கது.

கணக்காக

சரியாக குறியாக.

கணக்கு வழக்கு

வரவு செலவு வகை.

கணகண

உடற் காய்ச்சலைக் குறிப்பது : மணியோசையைக் குறித்தல்.

கணீர் என்று

உரத்த : தெளிவான குரல்.