க - வரிசை 81 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கங்கணம் கட்டு | உறுதி கொள். |
கங்காஸ் நானம் | தீபாவளியன்று விடியற்காலம் எண்ணெய் தேய்த்து நீராடுதல். |
கசக்கிப்பிழி | கடுமையாகத் துன்புறுத்து. |
கசமுச என்று | வெளிப்படையில்லாது. |
கசாப்புக் கடை | இறைச்சி விற்கும் கடை : கொலைத் தன்மையுடைய இடம். |
கச்சடா | மட்டமானது : கீழ்த்தரம். |
கச்சை கட்டு | உறுதி கொள்ளுதல். |
கஞ்சத்தனம் | ஈயாத உலோபத் தன்மை. |
கஞ்சி காய்ச்சி | பலரும் சேர்ந்து ஒருவனை எள்ளும் வகையில் செய்தல். |
கடகடவென்று | தடங்கலின்றி : விரைவாக. |
கடமுடா என்று | பெருத்த ஒலியோடு. |
கடுகடுப்பு | சினத்தால் வெளியாகும் கடுமை. |
கடுங்காப்பி | பால் சேர்க்கப்படாத காபிபானம். |
கடும் | அளவுக்கு அதிகமான. |
கடைந்தெடுத்த | முற்றிலும் : தேர்ந்தெடுத்த. |
கடையடைப்பு | வியாபாரம் நடக்காதபடி கடை மூடுதல். |
கடையைக்கட்டு | பணியைமுடி. |
கட்சி கட்டு | தன்தரப்பினராக ஒன்று சேர்த்து விவகாரத்தைக் கைக்கொள். |
கட்டவிழ்த்துவிடு | அழிவு சத்திகளை ஏவி எதிரிகளைத் துன்புறுத்து. |
கட்டுக் கோப்பு | ஒற்றுமை. |