க - வரிசை 80 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கோபாலர் | அரசர் |
கோப்பெருஞ்சோழன் | உறையூரிலிருந்து அரசியற்றிய சோழ மன்னருள் ஒருவன் |
கோவிதன் | அறிஞன் |
கோழியோன் | முருகக்கடவுள் |
கௌணியர் | திருஞானசம்பந்தர் |
கௌரிசேயன் | முருகன், ஆனைமுகன் |
கிருகப் பிரவேசம் | புதுமனை புகு விழா; புதுமனை புகுதல் |
கிருஷ்ணன் | கண்ணன் |
கும்பாபிசேகம் | குடமுழுக்கு |
கவிதை | பா |
கந்தபூர்வசர் | பிள்ளையார் |
குகாக்கிரசர் | பிள்ளையார் |
க்ஷவரம் | சவரம் : மயிர் நீக்குதல். |
கணாதிபர் | பிள்ளையார் |
கணேசர் | பிள்ளையார் |
கையாளு | பயன்படுத்துதல் |
கைக்கோடரி | கைச்சிறு கோடரி |
கண்டகோடரி | கைக்கோடரி |
கக்கூஸ் | கழிப்பிடம். |
கக்கூஸ் படை | தொடைப்பகுதியில் தோன்றும் படை நோய் வகை. |