க - வரிசை 79 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கும்பசன்

அகத்தியன்

குயிலன்

தேவேந்திரன்

குருநாதன்

முருகக்கடவுள், பரமகுரு

குருபரன்

பரமகுரு

குலசன்

ஒழுக்கமுடையவன், குலம் வழுவாத தாய்தந்தையரிடத்தில் பிறந்தவன்

குலமகன்

நற்குடியிற் பிறந்தவன்

குலிசபாயணி

கந்தன், தேவேந்திரன்

குலிசன்

இந்திரன்

குலிசி

இந்திரன்

குழகன்

சிவன், முருகன், இளையோன், அழகன்

குழக்கன்

சிவன்

கேகயன்

கைகேயன், கேகய நாட்டு அரசன், கைகேயி தந்தை, சிபிச்சக்கரவர்த்தி

கேசன்

தண்ணீரில் இருப்பவன், வருணன், திருமால்

கேசிகை

திருமால்

கேதாரன்

சிவன்

கேத்திரன்

திருமால், விண்டு, நாராயணன்

கேத்திரபாலன்

ஷேத்திரத்தைக் காக்கும் தேவதை, வயிரவன்

கைலையாளி

சிவன்

கோதமனார்

ஒரு முனிவர், கடைசிச் சங்கப் புலவர்களுள் ஒருவர்

கோபதி

இந்திரன், சூரியன், சிவன்