க - வரிசை 75 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கல்லறவிந்தம்

கற்றாமரை.

கல்லறுத்தல்

கல்லறிதல்.

கல்லாங்காசு

கலவோடு.

கல்லாசாரி

கற்சிற்பன்.

கல்லாதவன்

படிக்காதவன்.

கசெட்

அரசிதழ்

கதம்பம்

கலவை

கரகோஷம்

கையொலி

கவர்னர்

ஆளுநர்

கவுரவம்

பெருமை, மேன்மை

கண்டம்

பெருநிலம்

கண்டம்

கீழ் விதேகம்
மேல் விதேகம்
வட விதேகம்
தென் விதேகம்
வடவிரேபதம்
தென் விரேபதம்
வட பரதம்
தென் பரதம்
மத்திய கண்டம்

கதி

போக்கு, புகலிடம்

கதி

தேவகதி
மக்கள் கதி
விலங்கு கதி
நரக கதி

கதிரை

நாற்காலி

கம்பீரம்

மிடுக்கு

கபாலம்

மண்டையோடு

கருணை

அருள்

கவி

பா
கவிதை

கர்மம்

கருமம்