க - வரிசை 74 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கலைமலைவு | கல்விமயக்கம். |
கலைமான் | ஆண்மான், சரச்சுவதி. |
கலையானத்தி | துர்க்கை. |
கலையூர்தி | சரச்சுவதி, துர்க்கை. |
கலைவல்லோர் | அறிஞர், புலவர். |
கலைவாணி | சரச்சுவதி. |
கல்நாதம் | அன்னபேதி. |
கல்நார் | ஒருமருந்து. |
கல்நெஞ்சு | வன்னெஞ்சு. |
கல்மடி | காய்மடி. |
கல்மதம் | கன்மதம். |
கல்மாஷபாதன் | கன்மாடபாதன். |
கல்முதிரை | ஒருமரம். |
கல்முரசு | கட்பிட்டிமரம். |
கல்மொந்தன் | ஒருவாழை இனம். |
கல்யாண நாச்சியார் | துவாரகையிற்கோயில் கொண்ட இலக்குமி. |
கல்லகம் | கடினசித்தம், கல்வீடு. |
கல்லகாரம் | செங்குவளை, நீர்க்குளிரி. |
கல்லடிமூலம் | ஒரு பாஷாணம். |
கல்லத்துவம் | செவிட்டுத்தனம். |