க - வரிசை 70 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கர்ப்பசிராவம் | கர்ப்பங்கரைந்து போகுதல். |
கர்ப்பசூலை | இரத்தசூலை. |
கர்ப்பபாதம் | அகாலபிரசவம். |
கர்ப்பபிரம்ஸம் | கருப்பை அடியிறங்கிப் போகுதல். |
கர்ப்பப்பரிசம் | கரு உற்பத்தி. |
கர்ப்பப்பை | கருப்பாசயப்பை. |
கர்ப்பவதி | கர்ப்பஸ்திரீ. |
கர்ப்பவிச்சியுதி | கருவழிவு. |
கர்ப்பாசயம் | கர்ப்பப்பை. |
கர்ப்பாதானம் | ஒரு சடங்கு, சோபனகலியாணம். |
கர்ப்புணி | கர்ப்பவதி. |
கர்ப்புரை | சாம்பிராணி. |
கர்ப்பூரசிலாசத்து | ஒருமருந்து. |
கர்ப்பூரதுளசி | ஒருதுளசி. |
கர்ப்பூரப்புல் | ஒரு வாசனைப்புல் |
கர்ப்பூரவில்வம் | ஒருவில்வம். |
கர்ப்பூரவெற்றிலை | வாசனைவெற்றிலை. |
கார்வாலியுமரம் | ஒருமரம். |
கலக்கண்டகி | காலகௌசிகன் பாரி. |
கலகக்குருவி | ஒருபட்சி. |