க - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கத்தரிநாயகம்

யானைச்சீரகம்.

கத்தரிமணியன்

ஓரெலி.

கத்தளை

ஒருமீன்.

கத்தை

கழுதை, கற்றை.

கந்தநாகுலியம்

அரத்தை.

கந்தபூதியம்

நாய்வேளை.

கந்தரசு

சாம்பிராணி.

கந்தர்ப்பன்

மன்மதன்.

கந்தனேந்திரர்

ஒருசித்தர்.

கந்திவாருணி

பேய்த்தும்மட்டி.

கந்துகன்

தான்றி.

கந்துவான்

பிணைகயிறு.

கந்துளம்

பெருச்சாளி.

கந்துள்

கரி.

கந்தேறு

கோடகசாலை.

கபடு

கபடம்.

கபர்த்தம்

சிவன்சடை.

கபாடம்

கதவு, காவல்.

கபாய்

நிலையங்கி.

கபிஞ்சலம்

ஆந்தை, காடை, சாதகபுள்.