க - வரிசை 68 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருலி | ஒருபாம்பு. |
கருவிழி | கண்மணி. |
கருவிளா | ஒருமரம். |
கருவுயிர்த்தல் | ஈனல். |
கருவூமத்தை | ஓரூமத்தை. |
கருவெடுத்தல் | உடம்பெடுத்தல். |
கருவேப்பிலை | கருவேம்பினிலை |
கருவேம்பு | ஒருமரம். |
கருவேல் | ஒருமரம் |
கருவௌவால் | ஒருமீன். |
கருளை | கரளை. |
கருனீகசன்னி | ஒருசன்னி. |
கரேடம் | நகம். |
கரைகடத்தல் | எல்லைக்குமேற்படல். |
கரைகலம் | ஆபரணச்செப்பு. |
கரைகன்று | அழிகன்று. |
கரைகாணல் | எல்லைகாணுதல். |
கரைகாணாப்பேரொளி | கடவுள். |
கரைக்கல்லோலம் | கடற்பாசி. |
கரைக்காற்று | கடலோரத்தி லடிக்கும்காற்று. |