க - வரிசை 66 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருமாந்தரம் | கருமாதி, பாவம். |
கருமானுபவம் | செய்வினைப்போகம். |
கருமிசம் | வினை. |
கருமுகிற்சிலை | காந்தக்கல். |
கருமுகிற்பாஷாணம் | கார்முகிற் பாஷாணம். |
கருமுதல் | ஒருமீன். |
கருமேகம் | காளமேகம். |
கரும்பனூர் | ஓருர். |
கரும்பனையன் | ஒருபாம்பு. |
கரும்பாம்பு | இராகு, கருவழலை. |
கரும்பாலை | ஒருமரம், கரும்பாட்டுஞ்செக்கு. |
கரும்பிள்ளை | காக்கை. |
கரும்பிறை | கருஞ்சுக்கான். |
கரும்புக்கட்டி | கருப்பங்கட்டி. |
கரும்புசம் | வண்டு. |
கரும்புலி | ஒருபுலி. |
கரும்புல் | பனைமரம். |
கரும்புவில்லி | மன்மதன். |
கரும்புள்ளிக்கல் | கானகக்கல். |
கரும்புள்ளிதீட்டல் | ஒரு கோலந் தீட்டல். |