க - வரிசை 64 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருப்பாசயம் | கருவிருக்குமிடம். |
கருப்பாதானம் | ஒருசடங்கு. |
கருப்பிடித்தல் | யோசனை மட்டுக்கட்டுதல். |
கருப்பிணி | கருப்பஸ்த்ரீ. |
கருப்புக்கட்டி | கற்கண்டு, பனங்கட்டி,வெல்லக்கட்டி. |
கருப்புப்பு | கிருஷ்ணலவணம். |
கருப்புவில் | மதன்வில். |
கருப்புவில்லி | காமன். |
கருப்பூரசலாசத்து | ஒருமருந்து. |
கருப்பூரதீபம் | கருப்பூரவிளக்கு. |
கருப்பூரத்தயிலம் | ஒருமருந்து. |
கருப்பூரத்துளசி | ஒரு துளசி. |
கருப்பூரநீர் | ஒருமருந்து. |
கருப்பூரப்புல் | ஒருவாசனைப்புல். |
கருப்பூரமரம் | ஒருமரம் |
கருப்பூரவில்வம் | ஒருவில்வம். |
கருப்பூரவெற்றிலை | ஒருவெற்றிலை. |
கருப்பூர்வழக்கு | அழிவழக்கு. |
கருப்பெட்டி | கருப்பை. |
கருமகள் | காக்கை. |