க - வரிசை 60 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருங்கொண்டல் | தென்கீழ்க்காற்று. |
கருங்கொல் | இரும்பு. |
கருங்கொள் | ஒருகொள். |
கருங்கோழி | ஒருகோழி. |
கருங்கோள் | இராகு. |
கருச்சித்தல் | கர்ச்சித்தல். |
கருஞ்சாதி | கீழ்மக்கள். |
கருஞ்சாந்து | சேறு. |
கருஞ்சாரை | ஒருபாம்பு. |
கருஞ்சார் | அரைப்பூட்டு. |
கருஞ்சிலை | கருங்கல். |
கருஞ்சீரகம் | ஒருசரக்கு. |
கருஞ்சுக்கான் | ஒருகல். |
கருஞ்சுரை | ஒருசுரை. |
கருஞ்சூரை | ஒருமுட்செடி, செங்கத்தாரி. |
கருஞ்செம்பை | ஒருசெடி. |
கருடகேதனன் | விட்டுணு. |
கருடக்கல் | ஒருகல். |
கருடக்கொடியோன் | விட்டுணு. |
கருடமக்கொவ்வை | காக்கணம் |