க - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கண்ணாடி

உருவங்காட்டி, இஃது அட்டமங்கலத்துளொன்று.

கண்ணிகம்

மணித்தக்காளி.

கண்ணிக்கொடி

ஒரு படர்கொடி, ஒரு புல்.

கண்ணியம்

பெருந்தன்மை

கண்ணுகம்

குதிரை.

கண்ணுவன்

ஓரிருடி.

கண்ணுள்

கூத்து.

கதண்டு

கருவண்டு.

கதலிகம்

தேற்றா.

கதலிகை

துகிற்கொடி.

கதவம்

கதவு, காவல்.

கதவு

கபாடம்
காவல்

கதழ்

வேகம்.

கதாசித்து

இடைவிட்டகாலம்.

கதிக்கும்பச்சை

நாகப்பச்சை, பச்சைக்கல்.

கதுக்கு

இராட்டினக்காது.

கதுப்புளி

முக்கவருள்ள சூட்டுக்கோல்.

கதுமை

கூர்மை.

கதுவாலி

கவுதாரி, காடை.

கத்தபம்

கழுதை.