க - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருக்கூடு | கருப்பை. |
கருங்கடல்வண்ணன் | ஐயன், விண்டு. |
கருங்கண்ணி | ஒருமீன். |
கருங்கந்து | அகக்கந்தின் புறக்கந்து. |
கருங்கழல் | வீரக்கழல். |
கருங்கற்றலை | ஒருமீன். |
கருங்காக்கணம் | ஒரு காக்கணம்கொடி. |
கருங்காய் | செங்காய். |
கருங்காவி | கருங்குவளை. |
கருங்கிளி | ஒருகிளி. |
கருங்குங்கிலியம் | ஒரு மருந்து. |
கருங்குதிரையாளி | வயிரவன். |
கருங்குந்தம் | கண்ணோயுனொன்று. |
கருங்குரங்கு | கருநிறமந்தி. |
கருங்குருவி | ஒருபறவை. |
கறுங்குறுவை | ஒருநெல். |
கருங்குன்றி | ஒருகுன்றி. |
கருங்கை | அரியவேலை. |
கருங்கொடி | ஒருபூடு. |
கருங்கொட்டி | ஒருகொட்டி. |