க - வரிசை 58 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கரிமுகன்

விநாயகன்.

கரிமுரடு

அவிந்த கொள்ளிக்கட்டை.

கரியமணி

ஒரு கண்மணி, கரியபாசி.

கரியலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி.

கரியல்வடலி

பனங்கருக்கு.

கரியான்

கரியவன்.

கரில்லகம்

பாகல்.

கரிவங்கம்

காரயம்.

கரிவு

தீவு.

கருகருத்தல்

அரிகண்டப்படுத்தல்.

கருக்கரிவாள்

கூன்வாள்.

கருக்கழிய

கூர்மழுங்க.

கருக்காக்குதல்

கூராக்குதல்.

கருக்காய்

இளங்காய், பதர்.

கருக்கானவன்

கபடன்.

கருக்கிடை

யோசனை.

கருக்குச்சுருட்டு

கபடம்.

கருக்குப்பீர்க்கு

ஒரு பீர்க்குக்கொடி.

கருக்குவேலை

சித்திரவேலை.

கருக்குழி

கருப்பாசயம்.