க - வரிசை 57 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கராளவதனம்

பயங்கரமுகம்.

கரிக்காந்தல்

தூட்கரி.

கரிக்குடர்

மடக்குடர், மலக்குடர்.

கரிக்குருவி

ஒரு பறவை இனம்
ஒருபுள்
கஞ்சனம்

கரிக்கொள்ளி

குறைக்கொள்ளி.

கரிசம்

பஞ்சம்.

கரிசனை

அன்பு, பரிவு.

கரிசாமகம்

யானைக்கன்று.

கரிசை

கரசை.

கரிச்சாங்கிழங்கு

ஒருபூண்டு.

கரிச்சால்

கரிசலாங்கண்ணி.

கரிணிகம்

ஒரு காதணி.

கரிதம்

அச்சம்.

கரிதாரகம்

சிங்கம்.

கரிதிப்பிலி

ஆனைத்திப்பிலி.

கரிநாள்

கருநாள்.

கரிப்பூசுதல்

வசைவைத்தல்.

கரிப்போதகம்

யானைக்குட்டி.

கரிமருந்து

வெடிமருந்து.

கரிமாசலம்

சிங்கம்.