க - வரிசை 54 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கயவஞ்சி

உலோபன்.

கயவஞ்சித்தனம்

உலோபத்தனம்.

கயவாளகம்

கீழுலகம்.

கயற்கூடு

இணைக் யல்.

கயாரி

சிங்கம்.

கயிங்கரன்

ஏவல்செய்வோன்.

கயிமவாதி

வசம்பு.

கயிலாசப்பருவதம்

வெள்ளிமலை.

கயிலாயன்

சிவன்.

கயிலை

கயிலாசம்.

கயிலையாளி

சிவன்.

கயிறடித்தல்

நூல்போடுதல்.

கயிறுகட்டுதல்

நெடுகவிடுதல்.

கயிற்றுக்கொடி

கயிற்றாலாய கட்டுக்கொடி.

கயிற்றுக்கோலாட்டம்

ஒருவிளையாட்டு.

கயிற்றுக்கோல்

ஒருதராசு, வெள்ளிக்கோல்.

கயிற்றேணி

நூலேணி.

கரகண்டகம்

நகம்.

கரகாடம்

செங்கழுநீர்க்கிழங்கு.

கரசிக்கிருட்டி

ஒருபறவை.