க - வரிசை 51 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கமடத்தரு

சீவதாரு.

கமத்தொழில்

உழவுதொழில்.

கமநம்

நடை.

கமருதல்

அழுதல்.

கமலக்கண்ணன்

விண்டு.

கமலநிறமணி

சாதுரங்கப்பதுமராகம்.

கமலபவன்

பிரமா.

கமலபாலிகை

இடிம்பை.

கமலயோனி

பிரமன்.

கமலராகம்

பதுமராகம்.

கமலவூர்தி

அருகன், பிரமன்.

கமலாகாரம்

தாமரைவடிவம்.

கமலாசனன்

அருகன், பிரமன்.

கமலிப்பட்டு

ஒருபட்டு.

கமவாரம்

அணிப்பங்கு.

கமிகை

கடிவாளம்.

கமுகந்தீவு

சத்ததீவினொன்று.

கமுகமுத்து

கமுகுமுத்தம்.

கமுகம்பூச்சம்பா

ஒருநெல்.

கமுக்குக்கமுக்கெனல்

ஈரடுக்கொலிக்குறிப்பு.