க - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கட்டுவம்

ஒருகாலணி.

கட்டுவை

கட்டில்.

கட்டெறும்பு

ஓரெறும்பு
(கடுமை or கட்டு)

கணகன்

கணிகன்.

கணப்பு

சூடு, தீச்சட்டி.

கணவம்

அரசமரம்.

கணனம்

எண்ணல்.

கணாரிடுதல்

ஒலிக்குறிப்பு.

கணிகம்

நூறுகோடி.

கணிதம்

சத்துரு
கணிதவியல்

கணீர்கணீரெனல்

ஈரடுக் கொலிக்குறிப்பு.

கணேசன்

சிவன்,விநாயகன்.

கண்டாங்கி

ஒருபுடவை.

கண்டாஞ்சி

முள்வேல்.

கண்டியர்

பாணர்.

கண்டில்வெண்ணெய்

ஒரு பூடு.

கண்டுகம்

மஞ்சிட்டி.

கண்டுமுதல்

கண்டமுதல்.

கண்டூதி

காஞ்சொறி, தினவு.

கண்டூரம்

கண்டௌஷதம், பூனைக்காலி.