க - வரிசை 47 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கந்தகவுப்பு

ஓருப்பு.

கந்தகாரி

வற சுண்டி.

கந்தகாலோத்தரம்

ஒருநூல்.

கந்தகுடி

ஒருவகை வாசனை.

கந்தசட்சகம்

தமரத்தை.

கந்தசுக்கிலம்

அதிவிடயம்.

கந்தடம்

வெண்குவளை.

கந்ததன்மாத்திரை

மணத்தை யறியுமறிவு.

கந்ததாரம்

மது.

கந்தாளி

ஒருவகைநோய்.

கந்தபத்திரம்

வெண்டுழாய்.

கந்தபாடானம்

கந்தகம்.

கந்தபுஷ்பி

மெருகன்கிழங்கு.

கந்தபுட்பை

அவுரி.

கந்தப்பொடி

வாசனைப்பொடி.

கந்தமாதிரு

பூமி.

கந்தமூஷி

மூஞ்சூறு.

கந்தமுடிகம்

கத்தூரிமிருகம்.

கந்தமூலம்

கிழங்கு.

கந்தமூலி

சிறுஇணடஞ்செடி.