க - வரிசை 44 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கதலல்

அசைதல்.

கதலீபாகம்

கதலிபாகம்.

கதலுதல்

அசைதல்.

கதழும்

ஓடும்.

கதழ்வுறுத்தல்

கலங்கிக் கூப்பிடுதல்.

கதளகம்

வாழைமரம்.

கதாகுவயம்

கோஷ்டம்.

கதாக்கிரஜன்

விட்டுணு.

கதாமஞ்சரி

கோவையானகதை.

கதாயோகம்

சம்பாஷணை.

கதித்தவிலை

அதிகவிலை.

கதிபதம்

கூறியதுகூறல்.

கதியன்

கூறியது.

கதிரவன்

சூரியன்.

கதிரெழுதுகள்

அணு எட்டுக்கொண்டது, சூரியகிரணத்தெழுந்துகள்.

கதிரோன்

ஆதித்தன்.

கதிர்கட்டு

அரிக்கட்டு.

கதிர்க்கண்

அக்கினிநாட்டம்.

கதிர்க்குஞ்சம்

கதிர்க்கற்றை.

கதிர்க்குலை

பயிர்க்குலை.