க - வரிசை 43 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கண்பொத்திக்குட்டல்

ஒரு விளையாட்டு, களவெடுத்தல்.

கண்பொறித்தட்டுதல்

கண்மின்னல்.

கண்மடல்

இமை, ஊற்றுக்கண்.

கண்மதியம்

கண்மதிப்பு.

கண்மயக்கு

மயக்கம்.

கண்மருட்சி

கண்மயக்கு.

கண்மலர்

ஒருபணி, கண்.

கண்மறிக்காட்டல்

கண்குறிப்புக் காட்டல்.

கண்மின்னியார்த்தல்

கண் சுழன்றுஒளியார்த்தல்.

கண்முகிழ்த்தல்

கண்மூடுதல்.

கண்மூடல்

இருள்.

கண்விடுதூம்பு

ஒருவகைத் தோற்கருவி.

கண்விழிப்பு

கவனம், சாக்கிரதை.

கதகாலம்

போனகாலம்.

கதத்துவை

கெட்டவழி.

கதமாலம்

அக்கினி.

கதம்பகம்

கூட்டம்.

கதம்பாரி

தேற்றா.

கதம்வதம்

கடுகு.

கதலம்

வாழை.