க - வரிசை 42 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கண்ணீர்நடுக்குறை

மூக்கிரட்டை.

கணுக்கரசன்

துருசி.

கண்ணுக் கினியான்

கரிசலாங்கண்ணி,பொன்னாங்காணி.

கண்ணுக்குக்கண்ணானவன்

கண்போன்றவன், தோழன்.

கண்ணுங்கருத்துமாய்

மிக ஆவலாய்.

கண்ணுதலோன்வெற்பு

இரசதமலை.

கண்ணுலைமூடி

ஓருலைமூடி.

கண்ணுளாளர்

நாடகர்.

கண்ணுள்வினைஞர்

கண்ணாளர்.

கண்ணுறக்கம்

நித்திரை.

கண்ணுறுத்தல்

கண்ணுருட்டல்.

கண்ணேணி

மூங்கிலேணி.

கண்ணேறு

கண்ணூறு.

கண்ணோக்கு

கண்பார்வை.

கண்ணோய்

கண்ணினோய்.

கண்திட்டம்

கண்மதியம்.

கண்பட்டை

கண்மடல்.

கண்பரிகாரம்

கண்வைத்தியம்.

கண்பாடு

நித்திரை.

கண்புதைத்தல்

கண்பொத்தல்.