க - வரிசை 41 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கண்டீரம்

சதுரக்கள்ளி.

கண்டுகுணம்பாடி

முகமன் பேசுவோன்.

கண்டுதுத்தி

ஒருபூடு.

கண்டுமூலம்

சிறுதேக்கு, திப்பிலி.

கண்டூயை

தினவு.

கண்டூரை

பூனைக்காலி.

கண்டேரதம்

சிவிகை முதலியன.

கண்டோலம்

பெருங்கூடை.

கண்டௌஷதம்

கண்டாவிழ்தம்.

கண்ணடியர்

கன்னடியர்.

கண்ணரல்

நீங்கல்.

கண்ணாடிச்சால்

பொட்டுழவு.

கண்ணாடிப்புடையன்

ஓர்பாம்பு.

கண்ணாமண்டை

கண்மண்டை.

கண்ணாம்பூச்சி

ஓர்விளையாட்டு, கண்மயக்கம்.

கண்ணாம்பொத்தி

ஓர்விளையாட்டு.

கண்ணிகுத்துதல்

தடம்வைத்தல்.

கண்ணிமைத்தல்

இமைவெட்டல்.

கண்ணிமைப்பு

இமைவெட்டு.

கண்ணீருகுத்தல்

கண்ணீர்விடல்.