க - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடுஞ்சாரி | நவட்சாரம். |
கடுடம் | மருக்காரை. |
கடுத்தலூசி | கற்றுளைக்குங்கருவி. |
கடுப்படக்கி | எருமுட்டைப்பீநாறி. |
கடுப்பை | வெண்கடுகு. |
கடுமலை | காரீயமலை. |
கடுமுடெனல் | ஒலிக்குறிப்பு. |
கடுவன் | ஆண் மிருகத்தை இவ்வாறு அழைப்பர் |
கடுவல் | கடுங்காற்று, கடுநிலம். |
கடூரம் | கொடுமை, குரூரம், கடுமை |
கடேந்திரநாதர் | ஒருசித்தர். |
கடைக்குளம் | உத்திராளநாள். |
கட்கம் | வாள். |
கட்செவி | பாம்பு. |
கட்டப்பாரை | கடப்பாரை. |
கட்டாஞ்சி | முள்வேல். |
கட்டாம்பாரை | ஒருமீன். |
கட்டில் | மஞ்சம் |
கட்டுக்காடை | நீர்ப்பறவை வகை |
கட்டுக்கொடி | ஒருபூண்டு, காலிகட்டுங்கயிறு. |