க - வரிசை 39 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கண்கொழுப்பு | அகங்காரம். |
கண்கொள்ளாக்காட்சி | அடங்காதகாட்சி. |
கண்சமிக்கை | கண்சயிக்கை. |
கண்சயிக்கினை | கண்சாடை. |
கண்சாய்த்தல் | பதனழிதல், வாடல். |
கண்சாய்ப்பு | கண்சாடை. |
கண்சைகை | கண்சாடை. |
கண்டகசங்கம் | முட்சங்கு. |
கண்டகதுவாரம் | முட்டொளை. |
கண்டகபலம் | பலாப்பழம். |
கண்டகாசனம் | ஒட்டகம். |
கண்டகாரிகை | கண்டங்கத்திரி. |
கண்டகூணிகை | வீணை. |
கண்டக்கரப்பன் | ஒருநோய். |
கண்டக்கருவு | மிடறு. |
கண்டக்கிரந்தி | ஒரு நோய். |
கண்டங்கருவி | ஒருபாம்பு. |
கண்டங்காலி | நணடங்கத்திரி |
கண்டசருக்கரை | ஒருவகைச்சருக்கரை. |
கண்டசைலம் | குண்டுக்கல். |