க - வரிசை 38 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கணாதி | வெண்சீரகச்செடி. |
கணிதசாஸ்திரம் | ககோளநூல், கணக்குநூல். |
கணிதசிந்தாமணி | ஒருசோதிடநூல். |
கணிததீபிகை | ஒருசோதிடநூல். |
கணிப்பு | கணித்தல். |
கணியான் | கூத்தாடி. |
கணீரிடுதல் | ஒலிக்குறிப்பு. |
கணீல் | ஒலிக்குறிப்பு. |
கணுக்கால் | பரடு. |
கணுக்கிரந்தி | ஒரு மேகநோய். |
கணுப்பாலை | ஒருபாலை. |
கணுவட்டு | சிறு வாழைக்குலை. |
கணையோகவணி | வியாயோகம். |
கண்கட்டி | கட்கட்டி. |
கண்காசம் | ஒருநோய். |
கண்காந்தல் | கண்ணெரிவு. |
கண்குத்திப்பாம்பு | ஒரு பாம்பு. |
கண்குவளை | கண்குறி. |
கண்கூர்மை | கண்டதற்காகக் கொடுப்பது. |
கண்கையில் | தாய்க்கையிரு. |