க - வரிசை 37 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கட்டைக்குரல்

அமர்ந்தகுரல்.

கட்டைக்குருத்து

பொத்திக்குருத்து.

கட்டைப்புத்தி

தடிப்புத்தி.

கட்டைவைத்தல்

ஒருவிளையாட்டு.

கட்டோசை

பேரொலி.

கட்டோடே

முற்றாக.

கட்பலம்

தான்றி.

கணகாசகம்

கருங்கச்சோலம்.

கணக்கதிகாரம்

கணக்கு நூல்.

கணக்காசாரம்

கணிக்குமொழுங்கு.

கணக்காய்ச்சல்

கணரோகம்.

கணக்கோலை

கணக்கேடு, தளிரோலை.

கணதாரர்

ஓரருககுரு.

கணநீயம்

எண்ணிக்கையிடத்தக்கது.

கணபதி

விநாயகன்

கணப்பூண்டு

ஒருபூண்டு.

கணப்பொழுது

நொடிநேரம்.

கணராத்திரம்

பலவிரவு.

கணரீபம்

எருக்கு.

கணரோகம்

ஒரு நோய்.