க - வரிசை 35 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கட்டாசம் | நாவிமிருகம். |
கட்டாண்மை | பேராண்மை. |
கட்டாரிக்குத்துணி | ஒருபுடவை. |
கட்டாரிக்கையொலி | ஒருபட்டுச்சீலை. |
கட்டிக்கொள்ளுதல் | அடிப்படுத்துதல். |
கட்டிபடுதல் | கட்டியாதல். |
கட்டிமுட்டி | பெரிதுஞ் சிறிதுமானகட்டி. |
கட்டியங்கூறல் | எழுச்சிகூறல், புகழ்கூறல். |
கட்டியப்பொல்லு | எழுச்சிகூறுவோர்பிடிக்குந்தண்டு. |
கட்டுக்கதை | பொய்க்கதை |
கட்டுக்கலியாணம் | பாணிக்கிரகணம். |
கட்டுக்கழுத்தி | மங்கிலியதாரிணி. |
கட்டுக்காரன் | குறிசொல்வோன். |
கட்டுக்குத்தகை | ஏகதேசமாய் விற்குங்குத்தகை. |
கட்டுக்கோப்பு | கட்டடம் |
கட்டுச்சூலை | சூலைக்கட்டு. |
கட்டுச்சொல் | பொய். |
கட்டுச்சோறு | ஆற்றுணா,வழிவுணவு. |
கட்டுடைத்தல் | அணையுடைத்தல். |
கட்டுண்ணல் | கட்டுப்படுதல். |