க - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடைதடம்

வாயில்.

கடைத்தடம்

வாயில்.

கடைத்தரம்

கீழ்த்தரம்.

கடைத்தெரு

கடைவீதி.

கந்தடி

களந்தைச் சுற்ரி வைக்கொளால் வேலிகட்டுதல்

கடைநாள்

இரேவதி.

கடைப்பட்டது

இழிந்தது.

கடைப்பட்டவன்

இழிந்தவன்.

கடைப்பந்தி

கடைசிப்பந்தி.

கடைப்பிடிப்பு

உறுதியாய்ப்பிடிக்கை.

கடைப்புணர்முரண்

கடைமுரண்.

கடைப்புணர்வு

ஆபரணக்கடைப்பூட்டு.

கடைப்பூட்டு

பின்கோக்கி.

கடைமரம்

கடையுந்தறி.

கடைமுறை

இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9)
முடிவில். கடைமுறை தான்சாந் துயரந் தரும் (குறள், 792)
கடைசிமுறை

கடையயல்

ஈற்றயல்.

கடையவாடல்

கடைசிக்கூத்து, இந்திராணியாடல்.

கடையாந்தரம்

முடிவு.

கடையாயர்

கடையர்.

கடையீடு

இழிந்தது.