க - வரிசை 32 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடைகெட்டவன்

கீழ்மகன்.

கடைகேடு

மிகவிழிபு.

கடைகோல்

தீக்கடைகோல்.

கடைக்கட்டு

முடிப்பு.

கடைக்கண்

கடாட்சம், கண்ணின்கடை.

கடைக்கருவி

உடுக்கை.

கடைக்கனல்

வடவாக்கினி.

கடைக்காப்பு

பதிகத்தின் கடைசிப்பாட்டு.

கடைக்குடர்

கீழ்க்குடர்.

கடைக்குட்டி

கடைசிப்பிள்ளை.

கடைக்கொள்ளி

குற்றங்கொள்ளி.

கடைக்கோடி

அறக்கடைசி.

கடைசாரி

கடைகெட்டவன்.

கடைசோரி

அப்பக்கடை.

கடைச்சரக்கு

கரிக்குஞ்சரக்கு, பலசரக்கு.

கடைச்சல்

கடைதல்.

கடைச்சல்மரம்

அடையுமரம்.

கடைச்சற்காரர்

ஒருசாதியார்.

கடைச்சன்

இளையமகன், கடைப்பிள்ளை.

கடைசித்தாழை

பறங்கித்தாழை.