க - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடிகைவேளாளர் | ஒரு வேளாளர். |
கடிசூத்திரம் | கடிகாசூத்திரம். |
கடிச்சவாய்துடைச்சான் | காஞ்சொறி. |
கடிதேசம் | இடை, இடுப்பு. |
கடித்திரம் | மேகலை. |
கடிந்தமன் | குயவன். |
கடிப்பான் | ஊறுகாய், கறி. |
கடிப்பிடுகோல் | முரசறைகோல். |
கடிப்பிரதேசம் | பின்பக்கம். |
கடிப்பிரோதம் | தொடைச்சந்து. |
கடிமூலம் | முள்ளங்கிச்செடி. |
கடியடு | சிற்றரத்தை. |
கடியது | கடுமையானது. |
கடியந்திரம் | ஏற்றமரம். |
கடியிரத்தல் | மூக்கிரட்டை. |
கடிரோகம் | கோரைக்கிழங்கு. |
கடிலா | மூக்கிரட்டை. |
கடில்லகம் | துளசி. |
கடிவாளப்பூண் | விருளை. |
கடீரகம் | உபத்தம். |