க - வரிசை 27 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடற்பெருக்கு | கடல்நீர்ப்பெருக்கு. |
கடற்றாழை | கொந்தாழை. |
கடற்றிரை | கடல்அலை. |
கடற்றீ | கடனுரை. |
கடற்றேங்காய் | கடற்றெங்கங்காய். |
கடனாளி | கடன்பட்டவன். |
கடனிறுத்தல் | கடன்றீர்த்தல். |
கடன்கட்டு | கடன், காவற்சாலை. |
கடன்முறி | கடன்சீட்டு. |
கடன்மூர்த்தி | அருகக்கடவுள். |
கடாகாயம் | உருவுக்குள்வெளி. |
கடாகு | பறவை. |
கடாக்கம் | கடாட்சம். |
கடாசுதல் | எறிதல், கடாவுதல். |
கடாரன் | காமதூரன். |
கடாவுதல் | செலுத்தல். |
கடாவுதற்சீட்டு | பொருத்தச்சீட்டு. |
கடிகாசூத்திரன் | குயவன். |
கடிகாஸ்நாநம் | அரைஸ்நாநம். |
கடியைகாரம் | கடிகாரம். |