க - வரிசை 26 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடவுளாதாரம்

தேவதாரம்.

கடவுள்வாழ்த்து

தேவதுதி.

கடவைப்படுதல்

விட்டுப்பிரிதல்.

கடற்கரை

கடலருகு.

கடற்காளான்

கடலினோர்பாசி.

கடற்குருவி

கல்லுப்பு.

கடற்கொஞ்சி

ஒருமரம்.

கடற்கொடி

தும்பை.

கடற்கொழுப்பை

எழுத்தாணிப்பூடு.

கடற்சார்பு

நெய்தனிலம்.

கடற்சிற்பி

கடலிலுள்ள சிப்பி.

கடற்சில்

ஒருகடன்,மரக்கொட்டை.

கடற்பக்கி

கடற்பட்சி.

கடற்பச்சை

சமுத்திரப்பச்சை.

கடற்பட்சி

கிளிஞ்சில்.

கடற்பன்றி

ஒருகடல்மிருகம்.

கடற்பாசி

கடலிலுண்டாகும்பாசி.

கடற்பாலை

சமுத்திரசோகி
சமுத்திரப்பாலை

கடற்பிறந்தாள்

இலக்குமி, மூதேவி.

கடற்புறா

கடலின் வாழ்புறா.