க - வரிசை 23 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கச்சுச்சாத்தல்

விக்கிரகத்துக்குக் கச்சிடுதல்.

கச்சுப்பிச்சுப்படுதல்

கய்பலைப்படுதல்.

கச்சுரை

பெருங்காஞ்சொறி.

கச்சைக்கொடியன்

கன்னன்.

கச்சோரம்

கிச்சிலிக்கிழங்கு.

கஞலல்

கஞறல்.

கஞன்றல்

எழுச்சி.

கஞ்சகன்

கண்ணன்
பிரமா

கஞ்சகாரர்

கன்னார்.

கஞ்சநன்

மன்மதன்.

கஞ்சாகம்

தவிடு.

கஞ்சாக்குடுக்கை

குடுகுடா.

கஞ்சாராதி

விட்டுணு.

கஞ்சாரி

கண்ணன்.

கஞ்சாலேகியம்

ஒரு மருந்து.

கஞ்சித்தண்ணீர்குடித்தல்

காச்சடங்கில் ஒன்று.

கஞ்சிப்பசை

கஞ்சியிலானபசை.

கஞ்சிலிகை

இரவிக்கை.

கடகடப்பு

கடகடத்தல், வசக்கேடு.

கடகடன்னேவல்

ஈரடுக் கொலிக்குறிப்பு.