க - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கசானனன்

விநாயகன்.

கசிகசிப்பு

ஒட்டீரம்.

கசித்தி

வீழி.

கசியபன்

காசிபரிஷி.

கசுகசுப்பு

ஒட்டீரத்தன்மை.

கசுகசெனல்

ஈரமொட்டுங்குறிப்பு.

கசுமலம்

அழுக்கு கெட்டது.

கசேந்திரஐசுவரியம்

மிகுஐசுவரியம்.

கசேந்திரன்

அயிராவதம், இராசயானை.

கசேருகம்

தமரத்தை.

கசைமுறுக்கி

தட்டான்குறடு.

கச்சகர்

கொள்ளு.

கச்சக்கடாய்

ஆமை ஓடு.

கச்சபக்கடாய்

ஆமை ஓடு.

கச்சலம்

மேகம்.

கச்சலி

ஒரு மீன்.

கச்சற்கொடி

ஒருகொடி.

கச்சற்கோரை

ஒரு கோரை.

கச்சாந்தகரை

திராய்.

கச்சிசாதநிறமணி

சாதுரங்கப் பதுமராகம்.