க - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கசங்கலம்

கடல்.

கசங்கனம்

கடைவீதி.

கசடர்

கீழ்மக்கள்.

கசட்டைதயிர்

ஆடைநீக்கின தயிர்.

கசட்டைப்பிஞ்சு

இளம்பிஞ்சு, கசப்புப்பிஞ்சு.

கசபட்சியை

யதனைவணங்கி.

கசபம்

புல்.

கசபுளுகன்

பெரியபுளுகன்.

கசமடையன்

பெருமூடன்.

கசமாலம்

புகை.

கசமுகாந்தஜன்

சுப்பிரமணியன்.

கசரிபு

சிங்கம்.

கசரோகம்

கயரோகம்.

கசர்ப்பு

இறைச்சி.

கசவம்

கடுகுச்செடி.

கசவாரங்கெட்டது

அறக்கெட்டது.

கசவியாதி

கயரோகம்.

கசாரி

சிங்கம்.

கருசாகன்

கொலையாளன்.

கசாளம்

அடையல்.