க - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கசாயம்

கஷாயம்.

கச்சகம்

குரங்கு.

கச்சதூஷன்

தவளை.

கச்சளம்

இருள், கண்ணிடுமை.

கச்சன்

ஆமை.

கச்சாச்சேர்

எட்டுப்பலம் கொண்ட நிறை.

கச்சால்

மீன்பிடிக்குங்கூடு.

கச்சு

இடைக்கட்டு, பிணிக்கை,முலைக்கட்டு.

கச்சுரு

நெருப்பு.

கஞறம்

கள்.

கஞ்சாங்கோரை

ஒரு துளசி.

கஞ்சுளி

சட்டை, பொக்கணம்.

கடகு

கேடகம்.

கடசம்

கங்கணம்.

கடதாசி

கங்கதூதி.

கடப்பாரை

ஒரு கருவி.

கடமுடெனல்

ஈரடுக்கொலிக்குறிப்பு.

கடம்பூர்

ஓரூர்.

கடம்பை

கடம்பூர், ஒருகாட்டுமிருகம்.

கடலகம்

ஆமணக்கு,ஊர்க்குருவி,பூமி.