க - வரிசை 19 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ககனபம் | வீணாதண்டு. |
ககனாக்கிரகம் | அண்டமுகடு. |
ககன் | சூரியன். |
ககாரம் | ஓரெழுத்து. |
ககுஞ்சலம் | சாதகப்புள். |
ககுஸ்தம் | முதுகு. |
ககுரி | கடைதாழி. |
ககுவன் | கஞ்சன் றம்பி. |
கக்கப்பாளம் | கக்கப்பை, கக்கப்பொட்டணி. |
கக்கப்பொட்டணி | இடுக்குப் பொட்டணி. |
கக்கரம் | குகை. |
கக்கார் | தேமா. |
கக்குவான் | குக்கல்நோய். |
கங்கடகம் | கவசம். |
கங்கடகன் | சிவன். |
கங்கரம் | மோர். |
கங்காசனகன் | விட்டுணு. |
கங்காதரன் | சிவன். |
கங்காதீரம் | கங்கைக்கரை. |
கங்காதேவி | கங்கை. |