க - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
குசம் | குயவற்குரிய. |
குல்லா | வெளியான. (C. G.) |
குலாசா | பரந்த |
கேழ்த்த | நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96). |
கைப்பக்கம் | அருகில். |
கொச்சு | சிறிய கொச்சுப் பயைன் |
கோழ் | வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப் 65). |
கைர் | நல்ல |
கிஞ்சு | சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24). |
கண்டால் | அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை. |
காட்டில் | See காட்டிலும். ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற்காட்டில் பெரிய அழகையுடைய (சீவக.1461, உரை) |
காட்டிலும் | உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது. |
கருப்பு வயிற்று ஆலா | black-bellied tern |
கெட்டி | உறுதி |
கூட | உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65). |
குடபுலம் | மேல்நாடு. குடபுலங் காவலர் மருமான் (சிறுபாண். 47). |
காளகண்டன் | சிவன். (உரி. நி.) |
காச்சப்பட்டா | சூநாறிமரம். |
குழலியம்மை | ஏலவார் |
ககவசுகம் | ஆல். |