க - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கிராண்ட் | உரிமம் |
கமிசன் | மேல்தொகை |
கட்டையிலேபோக | ஒருவகைச் சொல். |
கெட்டேன் | இரக்ககுறிப்பு. அருளிதுவாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோ (கம்பரா. விபீடண. 127). |
கேட்டீரே | அசைநிலைச்சொல். (தொல். சொல் 425, உரை.) |
கபர்தார் | சாக்கிரதையாயிரு. |
கொய்யோ | வெற்றிக்குறிப்புச் சொல். (யாழ். அக.) |
கிலிசைகெட்ட | வேலையற்ற. |
குட | வளைந்த (திருமுரு. 229, உரை.) |
கேடா | பிரிந்துள்ள. |
கச்சா | எ-டு - கச்சாவீடு, கச்சாவேலை. |
கய | பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை). |
கரீப்பு | எளிய. (C.G.) |
கழி | மிகுந்த. (நன். 456). |
கன்னங்கரிய | மிகக் கருமையான. கன்னங்கரிய குழற் காலகை (பாரத. நிவாத.106). |
கனம்பொருந்திய | கண்ணியமுள்ள. |
காஸா | முதலிதரமான |
கிரான் | விலைபெற்ற. (C. G.) |
கிழக்கத்தி | கீழ்த்திசைக்குரிய. |
கிழக்கத்திய | See கிழக்கத்தி. |