க - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கர்நாடகம் | பழைமையான பழக்க வழக்கம் உடையவன் : நாகரிகமில்லாதவன். |
கருங்காலி | உடனிருந்து துரோகம் செய்பவன். |
கமுக்கம் | வெளியே தெரியாதபடி. |
கப்சா | கட்டுக் கதை. |
கண்ணடி | சாடை காட்டுதல். |
கட்டுக்காவல் | பலத்த காவல். |
கடுப்பு | தெறிக்கும் வலி. |
கடுதாசி | தாள் |
கடுகடு | கடுமையை வெளிப்படுத்துதல். |
கடாட்சம் | அனுக்கிரகம். |
கச்சிதம் | சரியான அளவு. |
க்ஷீணி | குன்றுதல். |
க்ஷயம் | நோய்வகை. |
க்ஷணம் | கணம். |
கார்த்திகை | நளி ( 29 ) ( 17 Nov) |
கேமரா | படப்பி, படப்பொறி |
கிராப் | குறிவு |
கூக்கர் | மின் சோற்றுப் பானை |
கீ செய்ன் | திறவிக் கொத்து |
கீ | திறவி |