க - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கிரமம் | முறை : ஒழுங்கு. |
கிடுகு | கீற்று. |
காஷாயம் | துறவிகள் அணியும் காவி நிறத்துணி : மருந்து கலந்த பாணம். |
காஜி | இஸ்லாமிய நீதிபதி. |
காவாலி | ஒழுக்கங் கெட்ட கொடியவன். |
காவு | உயிர்ப்பலி. |
காவு | காவுதல் |
காபந்து | காவல் : பாதுகாப்பு. |
காலி | ஒன்றுமில்லாத நிலை,வெறுமையான |
காண்பி | காட்டு. |
காடி | புளித்த நீர். |
கன்னாபின்னா | பொருளின்றி : ஒழுங்கின்றி. |
கறார் | கண்டிப்பு. |
களேபரம் | பரபரப்புடன் கூடிய குழப்பம். |
கவட்டை | இரு தொடைகளின் இடைப்பகுதி. |
கலிகாலம் | அறநெறி நீங்கிய செயல். |
கலாட்டா | தகராறு : வன்மை. |
கலர் | ஒரு வகை: இனிப்புப் பானம். |
கலகல | சிறு பொருள் மோத உண்டாகும் ஒலி. |
கர்வி | செருக்குடையவன் : பிறரை மதியாதவன். |