க - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கும்பல் | பெருங்கூட்டம் |
குமாஸ்தா | அலவலகப் பணிசெய்பவர். |
குதர்க்கம் | நியாமற்ற வகையில் செய்யும் வாதம். |
குச்சு | ஓலையால் வேயப்பட்ட சிறு குடிசை. |
குசும்பு | குறும்புச் செயல். |
குசு | நாற்றமடிக்கும் வாயு. |
குசினி | சமையல் அறை,சமையல் வீடு. |
கிஸ்மிஸ் பழம் | உலர்ந்த திராட்சை. |
கிஸ்தி | நிலவரி. |
கிறுக்கு | படிக்க முடியாதபடி எழுது : மனக்கோணல். |
கிளப்பு | நகரச் செய் |
கில்லாடி | மிகுந்த சாமர்த்தியசாலி : திறமையுடையவன். |
கிலேசம் | சஞ்சலம் கலந்த துக்கம் |
கிலுகிலுப்பை | சிறுவர் விளையாட்டுப் பொருள். |
கிலி | பீதி : மனக்கலக்கம். |
கிருபை | அருள் |
கிருதா | ஆடவர் காதின் அருகில் கன்னப் பகுதியில் அடர்த்தியாகவும் நீளமாகவும் விளங்கும் தலைமுடியின் தொடர்ச்சி. |
கிராதகன் | கொடுமைக்காரன். |
கிராக்கி | தேவைக்கு ஏற்றவாறு பண்டம் கிடைக்காத நிலைப்பாடு. |
கிரயம் | விலை. |