க - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கும்பன் | அகத்தியன், பிரகலாதன் பிள்ளைகளுள் ஒருவன் |
குலீனன் | உயர்குலத்தோன் |
கேசரர் | வித்தியாதரர் |
கேசவன் | சோழன், நிறைமயிருள்ளோன், திருமால், சிவன் |
கேசிகன் | திருமால் |
கேத்திரி | திருமால், விண்ணு, நாராயணன் |
கொன்றைசூடி | சிவன் |
கோவலன் | இடையன், கண்ணன், சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன் |
கோவிந்தன் | இந்திரன், நான்முகன், திருமான், பரமான்மா |
கௌசிகன் | இந்திரன், ஒரு முனிவர், விசுவாமித்திரர், பாம்பாட்டி |
கௌதமன் | ஆதிபுத்தன், கிருபன், சதாநந்தர் |
கௌரியன் | பாண்டியன் |
கைராசி | நன்மை தரும் பேறு. |
கைநாட்டு | எழுதப் படிக்கத் தெரியாதவன் |
கைக்கூலி | தன்னுடைய நலனை எண்ணிப் பிறர் சொற்படி கேட்பவன். |
கேவலம் | இழிவு(னது) |
கெடுபிடி | கடுமையாக ஆணையிடுதல். |
கூனு | வளைந்த உடலமைப்பு. |
கூப்பாடு | ஒன்றைக் கூறும் வகையில் உரத்துக் குரல் எழுப்புதல். |
கும்மாளம் | மகிழ்ச்சி ஆரவாரம். |