க - வரிசை 115 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கொலுசு | பெண்கள் கால்களில் அணியும் ஆபரணம், நடக்கும்போது மென்மையான மணியொலி எழுப்பும். |
கின்னரம் | ஒரு இசைக் கருவி |
கல்லலகு | ஒரு வகை இசைக்கருவி |
குடமுழவு | பறவைகளை ஓட்டத் தினைப்புனத்தில் பயன்பட்டதாகும். பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது. |
கிணை | முழவு வாத்திய வகை |
கத்தி | மரங்களை வெட்ட பயன்படுத்தும் கருவி. |
கூர்வாயிரும்பு | அரிவாண்மணை |
கிளிமூக்கெழுத்தாணி | தலைப்பக்கம் கிளிமூக்குப் போன்ற கத்தியையுடைய எழுத்தாணிவகை. |
கஞ்சிரா | கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும். |
கொக்கறை | கொக்கறை என அறியப்படும் நெருக்கமான இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும், இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது |
கொடுகொட்டி | கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது. |
காட்சி | பார்வைக்கு புலப்படுவது காட்சி |
கணிகை | தாசி, விபச்சாரி |
கனவான் | கௌரவமுடையவர் |
கம்பளிப்பூச்சி | உடலில் மயிருள்ள ஒரு வகைப் புழு; கம்பளிப்புழு |
கெட்டப்பொல்லு | கெட்ட + பொல்லு இது சிறிய பொறியாகும் இதை பயன்படுத்தி சிறு பறவை, மிருகங்களை வேட்டையாடுவார்கள். |
கள்ளு | பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும். |
கைம்பெண் | கணவனை இழந்தவள் |
கிருஷிகன் | உழவுத் தொழில் செய்வோன் |
கொட்டாரம் | யானைச்சாலை, யானைக்கூடம் |