க - வரிசை 114 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கலிமா | குதிரை |
காண்பு | காணுதல் |
கடம் | கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். |
கணினி | கணித அடிப்படையில் இயங்கும் மின்னணு தொழில் நுட்பக் கருவி = கணிப்பொறி; கணிப்பான் |
களரி | குங்பூ |
காவணப்பத்தி | அலங்கரிக்கப் பட்ட வீட்டுக் கூரை |
காவணம் | பந்தல் |
கல்லறைப்பூ | சுடுகாட்டுப் பூ |
குண்டு மல்லிகை | மல்லிகையை போன்று இருக்கும் ஆனால் பல இதழ்கள் காணப்படும். |
கண்டன் கறுவல் | இது ஒருவகை பாம்பு |
கும்கி | பிற அடங்காத / காட்டு யானைகளை ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற யானை |
களிறு | ஆண் யானை |
கோப்புறை | அடைவு |
குழூஉ | கூட்டம் |
கணினியியல் | கணினி மற்றும் அதன் பயன்பாடுகளைக் கற்கும் அறிவியல். |
கிளவி | சொல், பேச்சு, கூற்று, மொழி |
கற்பழிப்பு | கற்பு + அழிப்பு = கற்பழிப்பு. பொதுவாக பெண்கள் மீதான வன்புணர்ச்சி செயல்களைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. |
கரார் | உறுதி |
கருத்துரை | கருத்து உரை |
கருவமிலம் | கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான DNA, RNA என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன. |