க - வரிசை 113 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
காட்டேறி | வனதேவதை |
காடுறை | காடு + உறை |
கானகநாடன் | வனவாசி |
காடாற்று | இறந்த உடலை எரித்த சாம்பலை வைத்து செய்யப்படும் ஒரு சடங்கு |
காதணி | காதில் அணியும் அணிகலன் |
கம்மல் | பெண்கள் காதில் அணியும் சிறிய காதணி, ஓசை குறைவு |
காணிக்கடன் | ஒரு நிலம் (அ) காணி வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் |
குமரி | பூப்படைந்த/பருவமடைந்த, திருமணமாகாத பெண் |
குமாரி | மகள்,புதல்வி, குமரி |
கழஞ்சு | கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும், |
காண்டலளவை | நமக்குள்ளே, நாம் பெறும் அறிவை அளத்தல்.ஐம்பொறிகள் மற்றும் நூல்கள் மூலம், நமக்குக் கிடைத்த அறிவைத் தவிர மற்றவை, |
குறுணி | எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால் |
கொண்டல் | கீழ் காற்று |
கீழ்க்காற்று | கிழக்குத் திக்கில் இருந்து வீசுகின்ற காற்று |
கொங்கு | தேன் |
கொங்கலர்தார் | தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை |
கண்மூன்றுடையான் | சிவபெருமான் |
கைக்கொடுத்தல் | உதவுதல் |
காண்டல் | படையை உண்டாக்கல் |
கொல்லாமை | ஓருயிரையும் கொல்லாமை |